கேரளத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5000 நிதி
கேரள மாநிலத்தில் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க அம்மாநில அரசு முடிவு செய்தது.
அதன்படி, கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களில் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு மாதம் தோறும் 5000 ரூபாய் வீதம், மூன்று ஆண்டுகளுக்கு வழங்குவது தொடர்பாக கேரள மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் நபர்கள் சமூக நலன், நலநிதி அல்லது பிற ஓய்வூதியங்கள் பெற்றிருந்தாலும் இந்த நிதி உதவி பெற தகுதி பெற்றவர்களாக கருதப்படுவார்கள்.
மேலும், மாநிலத்திற்கு உள்ளேயும், வெளியேயும் அல்லது வெளிநாட்டில் உயிரிழந்த இருந்தாலும், அவர்கள் மாநிலத்தில் குடி இருப்பவர்களாக இருந்தால் அவர்களின் குடும்பங்களுக்கு இந்த நிதி உதவி வழங்கப்படும்" என்று கேரளா முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :













.jpg)
.jpg)




