ஆம்ஸ்ட்ராங் படுகொலை: சிபிஐ விசாரணை வேண்டும்- தமிழிசை

by Staff / 07-07-2024 05:19:06pm
ஆம்ஸ்ட்ராங் படுகொலை: சிபிஐ விசாரணை வேண்டும்- தமிழிசை

ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக வழக்கை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என பாஜக நிர்வாகி தமிழிசை சௌந்தரராஜன் பேட்டியளித்துள்ளார். BSP மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, “BSP மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் இழப்பை யாராலும் நிரப்ப முடியாது. ஆம்ஸ்ட்ராங்கிற்கு நியாயம் கிடைக்க வேண்டும். தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்கள் கொலைகள் அதிகரித்துள்ளது. பல அராஜகத்திற்கும், குற்றச்செயல்கள் நடைபெறும் இடமாக வட சென்னை மாறிக்கொண்டு இருக்கிறது" என்று குற்றம் சாட்டியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo