ஈரோடு அதிமுக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு

ஈரோடு மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக புடவைகளை பதுக்கி வைத்திருந்ததாக அசோக் குமார் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் கல்யாண் ஸ்டோர் என்ற கடையில் இருந்து மூட்டை மூட்டையாக சேலைகளை நேற்று தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்திருந்தனர். இதனிடையே வேட்புமனுத் தாக்கலின் போது தனது சொத்து மதிப்பு ரூ.560 கோடி என அசோக் குமார் தெரிவித்திருந்தார்.
Tags :