ராகுல் காந்தி சாவர்க்கரை இழிவுபடுத்தினால் நாங்கள் கூட்டணியில் இருப்போமா என்பதுசந்தேகம்

by Admin / 27-03-2023 07:33:45pm
 ராகுல் காந்தி சாவர்க்கரை இழிவுபடுத்தினால் நாங்கள் கூட்டணியில் இருப்போமா என்பதுசந்தேகம்

என் பெயர் சாவர்க்கர் அல்ல என் பெயர் காந்தி. காந்தி யாரிடமும் மன்னிப்பு கேட்கவில்லை என்று ராகுல் காந்தி அவதூறு வழக்கில் தண்டனை பெற்று தன் பாராளுமன்ற உறுப்பினர் என்கிற தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து சனிக்கிழமை நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்  மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து ராகுல் காந்தி தன்னுடைய பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார் அவர் சேனா பிரிவு காங்கிரஸ் மற்றும் என் பி சி யின் கூட்டணியில் உள்ளதால் ராகுல் காந்தி சாவர்க்கரைஅவதூறாக பேசி விட்டார் என்று உத்தகத் தாக்கரே தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.  ராகுல் காந்தி சாவர்க்கரை அவமதிக்க வேண்டாம்  என்றும் அவ்வாறு செய்தால்  கூட்டணியில் விரிசல் உருவாகும்  என்றும் எச்சரித்தார்., நாங்கள் சாவர்க்கரை கடவுளாக பார்க்கிறோம் என்றும் அவர் 14 ஆண்டுகளாக அந்தமான் சிறையில் மிகக் கொடூரமான சித்திரவதைகளை அனுபவித்தார். அவர் அடைந்த துன்பங்களை நாம் படிக்க மட்டும் தான் முடியுமே தவிர அதை பார்க்க முடியாது . அப்படிப்பட்ட தியாகம் செய்த சாவர்க்கரை இழிவுபடுத்துவதை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்றும் ராகுல் காந்தி சாவர்க்கரை இழிவுபடுத்தினால் நாங்கள் கூட்டணியில் இருப்போமா என்பது சந்தேகம் என்றும் கூறினார் அவ்வாறு தொடர்ந்து மேலும், அவர் நாங்கள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று தான் ராகுல் காந்தி கேட்டுக்கொள்கிறேமே. தவிர அவர் எதன் காரணமாக யாரோலோ தூண்டப்பட்டு விடுகிறார். அவர் இது போன்று நேரத்தை வீண் விரையம் செய்யாமல் ஜனநாயகத்தை காக்க வேண்டிய பொறுப்பில் இருக்கிறார் என்பதை மறந்து விட வேண்டாம் என்றும் அவர் கூறினார்

 

Tags :

Share via