மக்களின் கலைகள் தான் நமது பொக்கிஷம்- கனிமொழி கருணாநிதி
தூத்துக்குடி நெய்தல் கலை விழாவில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று விழாவினை துவக்கி வைத்து, மக்களிடம் பேசியதாவது:
நெய்தல் கலை விழாவிற்கு வருகை தந்துள்ள அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலைஞர்கள் மற்றும் விழாவின் நன்கொடையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்தார்.விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்களை தெரிவித்த முதலமைச்சர் அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்தார்.
இந்த விழாவின் தேவைகள் குறித்து எழுப்படும் கேள்விகளுக்கு, இந்த கலைகள் நமது பொக்கிஷங்கள் என்றும், மற்ற கலைகள் மதம் சார்ந்து இயங்கும் போது, இந்த கலைகள் தான் நமது மண் சார்ந்த வாழ்வினை பதிவு செய்ததாக குறிப்பிட்டார்.
மீனவர்கள் உள்ளிட்ட எளிய மக்களின் வாழ்வினை பதிவு செய்வதும், அவர்களின் உரிமைக்குரலாக இருப்பது இந்த இசை, கலைகள் என்று தெரிவித்தார். இந்த கலைகள் உயிர்ப்போடு, மக்களின் அலுப்பினை போக்குவதாகவும் இருப்பதாக கூறினார். இந்த கலை வடிவங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்று தலைவர் கலைஞர் அவர்கள் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்தார், தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளதாக கூறிப்பிட்டார். இத்தகைய கலை வடிவங்கள் இல்லாமல் போனால் தமிழர்களின் வாழ்வினை கண்டறிய, புதைப்படிமங்களை தோண்டிய எடுத்துதான் மக்களின் வாழ்க்கை முறையை கண்டறிய வேண்டும் என்றும் தெரிவித்தார்,
இந்த விழாவில், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், முன்னாள் அமைச்சர் தமிழரசி ரவிகுமார், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சருஶ்ரீ ஆகியோர் உடனிருந்தனர்.
Tags : The arts of the people are our treasure - Kanimozhi Karunanidhi