நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் திருக்கோவில் 516 ஆவது தேரோட்டம் கொடியேற்றத்துடன் துவங்கி உள்ளது

by Editor / 03-07-2022 10:51:07am
 நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் திருக்கோவில்  516 ஆவது தேரோட்டம் கொடியேற்றத்துடன் துவங்கி உள்ளது

அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனி திருத்தேரோட்ட திருவிழா  கொடியேற்றத்துடன் தொடங்கியது 10 நாட்கள் திருவிழா நடைபெறும் நிலையில் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வரும் 11ஆம் தேதி நடைபெறுகிறது கொடியேற்ற நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி அம்பாளை தரிசனம் செய்தனர்.


    சீரும் சிறப்புமிக்க தென் தமிழ்நாட்டின் வற்றாத ஜீவநதியாம் தாமிரபரணி  ஆற்றின் கரையில் அமைந்துள்ளது  திருநெல்வேலி என்னும் திருத்தலம்.        பஞ்ச சபைகளில் 'ஒன்றான தாமிர சபை அமைந்த இடம்.இறைவனுக்கு நைவேத்தியத்திற்காக காயப்போட்டிருந்த  நெல் மழையினால் நனையாதபடி வேலியிட்டு காத்ததால் இறைவன் நெல்வேலி நாதர்   என்று பெயா் பெற்றாா்.  நெல் வேலியிட்டு காத்தினால் திருநெல்வெலி என்று ஊா் பெயா் வரக் காரணமாயிற்று.  
இத்தகைய சிறப்பு கொண்ட திருத்தலத்தில் குடி கொண்டிருக்கும் அருள்மிகு சுவாமி நெல்லையப்பா் அருள்தரும் காந்திமதி அம்பாள் க்கு  வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுவது சிறப்பு. முக்கியமாக இறைவனுக்கு ஆனிப் பெருந் திருவிழாவும், அம்பாளுக்கு ஐப்பசி, ஆடி திருவிழாவும் சிறப்பானதாகும்  

  ஆனி பெரும் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியுள்ளது இதற்காக அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட நிலையில்  சுவாமி- அம்பாள்   கொடி மரம் முன்பு எழுந்தருள காலை எட்டு மணிக்கு மேல் சுவாமி சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் கொடி பட்டம் வேத மந்திரங்கள் முழங்க ஏற்றப்பட்டது கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி அம்பாளை தரிசித்துச் சென்றனர் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வரும் 11ஆம் தேதி நடைபெறுகிறது தமிழ்நாட்டின்  3வது பெரிய தேரான சுவாமி நெல்லையப்பர் தேரின் எடை 450 டன், அகலம் 28 அடி,நீளம் 28 அடி, உயரம் அலங்கார தட்டுகளை சேர்த்து சுமார் 70 அடியாகஅமைந்துள்ளது.  நெல்லையப்பர் கோயில் தேர் 515  ஆண்டுகளாக  பக்தர்கள் மூலம் மனித சக்தியால்  மட்டுமே இழுக்கப்பட்டுவருகிறது.  இந்தாண்டு 516 ஆவது தேரோட்டம் கொடியேற்றத்துடன் துவங்கி உள்ளது நாள்தோறும் சுவாமி அம்பாள் வீதி உலா பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர் வரும்  திருத் தேரோட்டம் நடைபெறும் 11ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது தேர் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பேரை வடம் பிடிப்பர் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தேரோட்டம் நடைபெறுவதால் திருநெல்வேலி மாவட்ட மக்கள் மட்டுமல்லாது தென் தமிழக மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


 

 நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் திருக்கோவில்  516 ஆவது தேரோட்டம் கொடியேற்றத்துடன் துவங்கி உள்ளது
 

Tags : Nellaiyapar - Gandhimati Ambal Temple 516th Chariot Commences With Flag Hoisting

Share via

More stories

Logo