இஸ்ரேல்வான்வழி தாக்குதல்-14 பாலஸ்தீனிய பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் காசா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் நீடித்திருக்கும் நிலையில், வான்வழி தாக்குதல் மூலம் 14 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளனர். வடக்கு காசாவில் உள்ள பெய்ட். லகியா மற்றும் மத்திய காசாவின் நோசிராத் அகதி முகாம் ஆகிய பகுதிகளில் இந்த தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. லூசிராத் முகாமில் உள்ள ஒரு வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த பலர் உயிரிழந்துள்ளனர் காசாவின் வடக்கு பகுதியில் இஸ்ரேலிய படைகள் தங்களது முற்றுகையை தீவிரப் படுத்தி உள்ளதால் மீட்பு பணிகளிலும் மருத்துவ சேவைகளிலும் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது.
Tags :



















