தென் தமிழகத்தில் மழை தொடரும் என தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பெரும்பாலான இடங்களில் மழை தொடரும்.என தகவல்கள் வெளியாகியுள்ளது.அதன்படி தமிழக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் மலையை ஒட்டிய பகுதிகளான பேச்சிப்பாறை பெருச்சாணி திற்பரப்பு சிற்றாறு கோதையாறு மாஞ்சோலை காக்காக்சி நாலுமுக்கு ஊத்து குதிரைவெட்டி காரையார் புளியரை மேக்கரை மேகமலை கொடைக்கானல் வால்பாறை பொள்ளாச்சி நீலகிரி ஆகிய இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு .கொல்லம் கோட்டயம் பத்தனம்திட்டா இடுக்கி பாலக்காடு திரிசூர் எர்ணாகுளம் ஆகிய கேரளா மாவட்டத்திலும் இன்று மாலை மழை எதிர்பார்க்கலாம் என தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா தகவல்.
Tags : தென் தமிழகத்தில் மழை தொடரும் என தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்.