டுவிட்டரில் புதிய கட்டுப்பாடுகள் மஸ்க் அதிரடி

by Staff / 21-12-2022 02:54:36pm
டுவிட்டரில் புதிய கட்டுப்பாடுகள் மஸ்க் அதிரடி

டுவிட்டரை வாங்கிய எலன் மஸ்க் பரபரப்பு முடிவுகளை எடுத்து வருவது தெரிந்ததே. இந்தநிலையில் மஸ்க் சமீபத்தில் மற்றொரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி டுவிட்டரில் நடத்தப்படும் கருத்துக் கணிப்புகளில் டுவிட்டர் ப்ளூ சந்தாதாரர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மஸ்க் சமீபத்தில் ட்விட்டர் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமா என்று ஒரு கருத்துக் கணிப்பு நடத்தினார். இந்த வாக்கெடுப்பில், பெரும்பாலான உறுப்பினர்கள் ஆம் என்று பதிலளித்தனர். இதனால் இந்த கருத்துக்கணிப்பு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே டுவிட்டர் கருத்துக் கணிப்புகளுக்கு மஸ்க் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

 

Tags :

Share via