தேமுதிக காற்று எந்தத்திசையை நோக்கி வீசும்..

by Editor / 28-01-2024 12:44:49pm
தேமுதிக காற்று எந்தத்திசையை நோக்கி வீசும்..

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் காலமான நிலையில் அவருக்கு உள்ள மக்கள் ஆதரவை, அவர் யாருக்கும் தெரியாமல் நாடுமுழுவதும் மக்களுக்கு செய்த உதவிகள் ஆகிவை அவரது மறைவுக்குப்பின்னரே ஒன்றன் பின் ஒன்றாக வெளிவரத்தொடங்கியுள்ளன.இதுவே மக்களிடம் அவருக்குண்டான அனுதாப அலையை அதிகரித்துவருகிறது.மேலும் தமிழக ஊடகங்களும் மறைந்த முதல்வர்கள் கலைஞர்,ஜெயலலிதா ஆகியோர் அடக்கம் செய்யபபட்டுள்ள பகுதியில் நேரடி ஒளிப்பரப்பு..செய்தி முக்கியத்துவம் உள்ளிட்டவைகளை  கொடுக்காத முக்கியத்துவத்தை தற்போது விஜயகாந்திற்கு கொடுத்துவருவதால் மக்கள் மத்தியில் தேமுதிகவுக்கு ஒரு உயர்ந்த இமேஜ் ஏற்பட்டுவருகிறது.இதனை தொலைநோக்கு பார்வையோடும்..தொட்டுவிடும் தூர பார்வைகளாலும் உளவுத்துறை மூலமாக உற்று நோக்கிவரும் அரசியல் கட்சிகள் அதை தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்ள வியூகம் அமைத்து வருகின்றன.மக்களவைத்தேர்தல் ஆரவாரம் தொடங்கியுள்ளநிலையில்  அரசியல் களத்தில் அனைவரின் கவனமும் தேமுதிக பக்கம் திரும்பியுள்ளது பாஜகவா, திமுகவா, அதிமுகவா அல்லது தனித்தா என்கிற 4விதமான கோணத்தில் களம் இருந்தாலும் அதனை உற்று நோக்கியபடி நிற்கிறாா் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.அதே சமயம் தேமுதிகவின் கற்று பாஜக பக்கமே விசுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.அதற்கு சாட்சியே தற்போது காந்த சில தினங்களாக நடந்துவரும் நிகழ்வுகள் என்கின்றனர்.இருப்பினும் கடந்த கால நிகழ்வுகளை உற்று நோக்கி காய்களை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நகர்த்துவார் என்றும்,மீண்டும் தமிழகத்தில் இழந்த சட்டமன்றத்தொகுதிகளைக்காட்டிலும் அதிக இடங்களை கைப்பாற்றவும்,கட்சியை வலுவாக்கவும் அவர் முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாகவும் தகவல்கள் உலா வருகின்றன.

 

Tags : தேமுதிக காற்று எந்தத்திசையை நோக்கி வீசும்..

Share via