அசாம் மாநில உயிரிழந்த 9 பணியாளர் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு 10 லட்சம் நிவாரணம்-முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் ஆணை.
எண்ணூரில் பெல் நிறுவனம் மேற்கொண்டு வரும் மின் உற்பத்தி நிலைய கட்டுமான பணியின் போது ஏற்பட்ட விபத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த பணியாளர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக ரூபாய் 10 லட்சம் நிவாரணமாக வழங்கிடவும் இறந்துபட்டவர்களின் உடலை அவர்களது சொந்த மாநிலத்திற்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளையும் மின்சார வாரியத் துறை அமைச்சர் சிவசங்கர், மின் உற்பத்தி பகிர்மான கழகத் தலைவர் நிவாரண பணிகள் மேற்கொள்ள தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
Tags :



















