தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் தேர்தல் பரப்புரை
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று திருச்சி கிழக்கு தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது. பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை அவர் பரப்புரை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது சட்டம் ஒழுங்கை பராமரிக்க காவல்துறை 27 நிபந்தனைகளை விதித்துள்ளது திருச்சி விமான நிலையம் அருகே உள்ள வயர்லெஸ் சாலை கேகே நகர் பேருந்து நிலையம் காஜா மலை கோழி பண்ணை சாலை மற்றும் கொட்டப்பட்டு ஆகிய பகுதிகளில் திறந்த வாகனத்தில் விஜய் வாக்கு சேகரிக்க உள்ளார் சென்னையில் இருந்து தனி விமான மூலம் பிற்பகல் 2 மணி அளவில் திருச்சி வந்தடையும் அவர் அங்கிருந்து நேரடியாக பரப்புரையை தொடங்குகிறார் விஜயின் பரப்புரை வாகனத்தை தொண்டர்கள் இருசக்கர வாகனங்களிலோ அல்லது வேறு எந்த வாகனங்களில் கர்ப்பிணி பெண்கள் கூட்டத்தில் பங்கேற்கக் கூடாது என்றும் காவல்துறை விதித்துள்ள கட்டுப்பாடுகளை தவறாது பின்பற்றப்பட வேண்டும் என்றும் பொதுச்செயலாளர் ஆனந்த் சமூக வலைதள பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Tags :



















