மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இரண்டு சதவீத அகவிலைப்படி உயர்வு.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இரண்டு சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை சனிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அகவிலைப்படி அடிப்படை ஊதியத்தில் 58 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த உயர்வு ஜனவரி 1 முதல் முன் தேதியிட்டு நடைமுறைக்கு வரும். இதன் மூலம் சுமார் 50.46 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 68.27 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவர். ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாத காலத்திற்கான நிலுவைத் தொகை ஊழியர்களுக்கும் ஓய்வூதியதார்களுக்கும் வழங்கப்படும் . அகவிலைப்படி உயர்வால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 6,792.24 கோடி கூடுதல் செலவாகும் ..
Tags :



















