சமூக நீதிக்காக போராடும் கட்சிகளின் கூட்டணியாக இந்தியா கூட்டணி- தமிழக முதலமைச்சர் மு. க .ஸ்டாலின்
திருப்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடன் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் கலந்து கொண்டார். வேட்பாளர்களை அறிமுகம் செய்து பின்னர் உரையாற்றிய முதலமைச்சர் சமூக நீதிக்காக போராடும் கட்சிகளின் கூட்டணியாக இந்தியா கூட்டணி திகழ்வது ஆகவும் நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வீழ்த்தி ஒன்றிணைந்துள்ளதாககுறிப்பிட்டார். ஒன்றிய இந்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகள் திருப்பூர் போன்ற மேற்கு மண்டலத்தின் தொழில் வளர்ச்சியை பாதித்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். தமிழ்நாட்டுக்கு வருக சகோதரர் என தேஜஸ்வீ வரவேற்ற முதலமைச்சர் பெரியார் மற்றும் கர்ப்பூரி தாகூர் ஆகியோரின் வழிகாட்டுதலில் இந்த கூட்டணி பீகார் முதல் தமிழ்நாடு வரை வலுவாக இருப்பதாகவும் தெரிவித்தார் .பெண்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் பல்வேறு மக்கள நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் திமுக அரசு முன்னணியில் இருப்பதை சுட்டிக்காட்டியதுடன் பிளவு படுத்தும் அரசியலில் முறியடிக்க வாக்களிக்கு மாறும் வேண்டுகோள் விடுத்தார்.. கூட்டத்தில் தேஜஸ்வி யாதவ் பேசிய தமிழ்நாடு மனித வள மேம்பாட்டு குறியீட்டில் முதலிடத்தில் இருப்பதையும் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பான ஆட்சியைபாராட்டி வெகுவாக புகழ்ந்தார்.
Tags :


















