தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து உரையாற்றினார்-.பிரதமர்நரேந்திர மோடி
பிரதமர்நரேந்திர மோடி கோவை கொடிசியா மைதானத்தில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து உரையாற்றினார். தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டு வருவதாகவும் தமிழக மக்கள் என் .டி .ஏ உள்ளே; திமுக வெளியே .என்ற தெளிவான செய்தியை வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டார். மகளிர் இட ஒதுக்கீடு மசதாவி திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் எதிர்ப்பதாக குற்றம் சாட்டினார் சாதாரண பெண்கள் முன்னேறுவது குறித்து இந்த கட்சிகள் ஏன் கவலைப்படுகின்றன என்று கேள்வி எழுப்பி, பெண்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடும் என்று உறுதியளித்தார். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறு வரையறை செய்யப்பட்டிருந்தால், தமிழகத்திற்கு அதிக இடங்கள் கிடைத்திருக்கும் என்று ஆனால் திமுகவை பிரதமர் மோடி விமர்சித்தார் .திமுக காங்கிரஸ் கூட்டணி வலுவற்றது என்றும் ஆனால் என். டி. ஏ கூட்டணி ஒற்றுமையுடன் செயல்படுவதாகவும் தெரிவித்தார் .இந்த மேடையில் அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் மாநில பாஜக தலைவர் நைனா நாகேந்திரன் உள்ளிட்ட கூட்டணி தலைவர்களுடன் இணைந்து உரையாற்றினார். திமுகவினர் கருப்பு உடை அணிந்து போராடுவதன் மூலம் தங்களின் தவறான எண்ணங்களையும் மறைக்க முடியாது என்றும் மக்கள் அவர்களின் செயல்பாடுகளை நன்கு அறிவார்கள் என்றும் பிரதமர் இந்திய கூட்டணி மீது குற்றச்சாட்டை சுமத்தினார்.
Tags :



















