உள்ளாட்சி அமைப்புகளில்மாற்றுத்திறனாளிகளுக்கு அங்கீகாரம்-முதல்வர் தகவல்.

சென்னையில் மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்புக் குழு நடத்திய பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் தேர்தலை சந்திக்காமல் நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள். ஊராட்சி ஒன்றியங்களில் 388 பேரும், மாவட்ட ஊராட்சிகளில் 37 பேரும் பிரதிநிதித்துவம் பெறுவர். நகர்ப்புற உள்ளாட்சிகளில் 650 பேர், கிராம பஞ்சாயத்துகளில் 12,913 பேரும் பிரதிநிதித்துவம் பெறுவர்” என்றார்.
Tags : உள்ளாட்சி அமைப்புகளில்மாற்றுத்திறனாளிகளுக்கு அங்கீகாரம்-முதல்வர் தகவல்.