by Editor /
01-07-2023
08:14:31am
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த நகரிகுப்பத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படை <br />
தென் மேற்கு பருவ மழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை 04 வது படை பிரிவில் இருந்து கமாண்டன்ட் அகிலேஷ் குமார் உத்தரவின் பேரில் தலா 25 வீரர்கள் கொண்ட 07 குழுக்கள் கேரள மாநிலத்தில் உள்ள
* பத்தனம்திட்டா
* ஆழப்புலா
* இடுக்கி
* கோழிக்கோடு
* மலப்புரம்
* திருச்சூர்
* வயநாடு
ஆகிய 7 மாவட்டத்திற்கு கேரள மாநில அரசு கேட்டுக்கொண்டதின் பேரில் நவீன தொலை தொடர்பு சாதனங்கள் பொருத்திய வாகனம் , ரப்பர் படகு, மரம் வெட்டும் கருவிகள் வெள்ளம் ,மற்றும் நிலச்சரிவு ஏற்படும் பட்சத்தில் மீட்பு உபகரணங்கள் ஆகியவற்றுடன். துணை கமாண்டன்ட் வைத்தியலிங்கம் தலைமையில் 175 வீரர்கள் கேரளா மாநிலத்திற்கு விரைகின்றனர்.
Tags :
Share via