ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர்  தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை

by Editor / 03-06-2021 04:46:49pm
ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர்  தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை


ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள திரால் பகுதியில் தீவிரவாதிகள்  நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாஜக தலைவரும், கவுன்சிலருமான ராக்கேஷ் பண்டிதா கொல்லப்பட்டார்.
பாஜக தலைவர் ராகேஷ் பண்டிதா  தனது நண்பர் வீட்டுக்கு சென்றுவிட்டு இரவு 10.15 அளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் 3 பேர் துப்பாக்கியால் சுட்டத்தில் பண்டிதாவும், அவருடன் வந்த நண்பரின் மகளும் காயமடைந்தனர்.பலத்த காயமடைந்த ராகேஷை அங்கிருந்த மக்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர், துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நண்பரின் மகள் பலத்த காயங்களுடன் சிகிச்சையில் உள்ளார்.பாஜக தலைவர் ராகேஷ் கொல்லப்பட்டதற்கு ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, பாஜக தலைவர், முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் குறித்து போலீஸார் தரப்பில் கூறுகையில் ' பாஜக தலைவர் ராகேஷுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது, பாதுகாப்பு வளையத்தில் உள்ள நபராக ராகேஷ் இருந்தார். ஆனால், இந்த சம்பவம் நடந்தபோது, தனது சொந்த கிராமத்துக்குச் செல்ல இருப்பதால், பாதுகாவலர்கள் வேண்டாம் என்று கூறிவிட்டு ராகேஷ் சென்றுள்ளார்,
அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பையும் ராகேஷ் மறுத்துள்ளார். இந்த கொலை தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸார் பாதுகாப்பு இல்லாமல் ராகஷ் ஏன் சென்றார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது' எனத் தெரிவித்தனர்.

 

Tags :

Share via