கேரள மீனவர்களை தாக்கவில்லை: தூத்துக்குடி மீனவர்கள் விளக்கம்

by Staff / 23-03-2024 12:29:09pm
கேரள மீனவர்களை தாக்கவில்லை: தூத்துக்குடி மீனவர்கள் விளக்கம்

தூத்துக்குடி விசைபடகு துறைமுகத்தில் இருந்து அதிகாலை கடலுக்கு சென்று இரவு 9 மணிக்கு கரை திரும்ப வேண்டும் என்பது விதிமுறை. இதனை பின்பற்றி இங்குள்ள மீனவர்கள் தொழில் செய்து வருகினறனர். சமீப நாட்களாக மீன்பிடி தொழிலில் மந்தம் ஏற்பட்டதால் அனைத்து படகுகளும் கடலுக்கு செல்லாமல் வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் மட்டுமே மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.  

இந்நிலையில் மீன்பிடி தொழொல்  குறைவாக இருக்கக்கூடிய நிலையில் கேரளா, குளச்சல் போன்ற பகுதிகளில் இருந்து  மீன்பிடி தொழில் செய்யக்கூடிய படகுகள் கடந்த சில நாட்களாக தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதிகளுக்குள் வந்து மீன்களை பிடித்து செல்வதாக தூத்துக்குடி விசைபடகு மீனவர்களுக்கு தகவல் கிடைத்தது. மீனவர்கள் உடனடியாக மீன்வளத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தபோது மீன்வளத்துறை அதிகாரிகள் அதனை கண்டுகொள்ளாமல் இருந்தனர்.  

இதனால் தூத்துக்குடி விசைபடகு மீனவர்கள் சிலர் ஒன்றினைந்து விசைபடகுகள் மூலம் கடந்த 20-ம் தேதி இரவு  கடலுக்கு சென்று கேராளா குளச்சல் படகு வருகின்றதா ?என்று சோதனை செய்ய...... அப்போது அங்கு  கேரளா விசைபடகு மற்றும் 5-குளச்சல் விசைபடகு என 6-படகு மீன்பிடிப்பது தெரிய வர,,,, 6-படகு,,86-மீனவர்களை   தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் கொண்டு வந்து போலீசார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

 

Tags :

Share via

More stories