உயர்நிலைக் குழுவுடன் மோடி ஆலோசனை
தற்போதைய கரோனா நிலவரம் குறித்து மத்திய உயர்நிலைக் குழு அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
நாடு முழுவதும் கரோனா நோய்த் தொற்றின் இரண்டாம் அலையின் வேகம் சற்று குறைந்துள்ள நிலையில் பண்டிகை காலங்கள் தொடங்குவதால் மூன்றாம் அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய உயர்நிலைக் குழுவுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் கரோனா தற்போதைய நிலவரம், தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகம், மூன்றாம் அலைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags :