தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி பயணம்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்றிருந்தார். டெல்லியில் கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தைப் பார்வையிட்டார். நேற்று இரவு எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். அதிமுக எம்.பிக்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உடன் இருந்தனர். இந்த சந்திப்பின்போது 2026 சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த சந்திப்புக்குப் பின்னர் உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் தளத்தில், “2026-ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும்” என்று பதிவிட்டிருந்தார்.இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்றிரவு டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து இருந்த நிலையில் அண்ணாமலையும் டெல்லி பயணம் முக்கியத்துவம் கருத்தப்படுகிறது.
Tags : தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி பயணம்.