தமிழக காவல்துறை ஆயுதப்படை எஸ்பி அருண் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.

by Editor / 16-06-2025 05:22:43pm
தமிழக காவல்துறை ஆயுதப்படை எஸ்பி அருண் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை சேர்ந்தவர் அருண். இவர் கடந்த 2013ம் ஆண்டு குரூப்-1 தேர்வு மூலம் நேரடியாக தமிழ்நாடு காவல்துறையில் டிஎஸ்பியாக சேர்ந்தார். அதன் பிறகு அவர் 2014ம் ஆண்டு எஸ்பியாக பதவி உயர்வு பெற்றார். அதன் பிறகு தற்போது தமிழ்நாடு காவல்துறை ஆயுதப்படை பிரிவின் 12வது பட்டாலியன் கமாண்டான்டாக அருண் பணியாற்றி வந்தார்.இந்நிலையில் தன்னை பணியில் இருந்து விடுவிக்கும் படி திடீரென தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவாலிடம் ராஜினாமா கடிதத்தை எஸ்பி அருண் வழங்கினார். அவரது ராஜினாமா கடிதத்தின் படி டிஜிபி மற்றும் ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஜெயராம் ஆகியோர் ஆலோசனையை தொடர்ந்து அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்று உள்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து எஸ்பி அருண் ராஜினாமாவை தமிழக அரசு ஏற்றுக்கொண்டது. அதன் பிறகு உடனடியாக தமிழக அரசு உத்தரவுப்படி தமிழ்நாடு காவல்துறையில் இருந்து ஆயுதப்படை எஸ்பி அருண் விடுவிக்கப்பட்டு, அதற்கான கடிதம் அவரிடம் நேரடியாக வழங்கப்பட்டது.*

 

Tags :

Share via