இன்னும் ஒன்னரை ஆண்டுகள் மக்கள் சகித்துக் கொண்டுதான் ஆக வேண்டும் -முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் .

by Editor / 15-11-2024 10:22:14pm
 இன்னும் ஒன்னரை ஆண்டுகள் மக்கள் சகித்துக் கொண்டுதான் ஆக வேண்டும் -முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் .

தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பிரானூர் பார்டரில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்து ஒன்றிய செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளரும்,சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ண முரளி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது: 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கு இப்போதே வேலைகளை துவக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

தொடர்ந்து பேசிய அவர்   ஒரே மேடையில் யார் ஆட்சியில் திட்டங்கள் கொண்டு வந்தோம் என விவாதம் செய்யலாம் என எங்கள் பொது செயலாளர் எடப்பாடியார் முதல்வர் ஸ்டாலினை அழைத்த நிலையில் ஸ்டாலின் கப் சிப் ஊமை சாமியார் ஆகிவிட்டார்  எனவும் உதயநிதியை துணை முதலமைச்சர் ஆக பதவி வழங்கியது குறித்து முதல்வர் ஸ்டாலின்  ஒரு கழுதையை கூட துணை முதல்வராக ஆக்கினாலும் மக்கள் இன்னும் ஒன்னரை ஆண்டுகள் சகித்துக் கொள்ள வேண்டும் என்ற சூழலில் இருப்பதாகவும் எனவும் விமர்சித்தார்.

 

Tags : மக்கள் சகித்துக் கொண்டுதான் ஆக வேண்டும் -முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் .

Share via