ரூ. 1. 26 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

by Staff / 01-12-2023 03:30:54pm
ரூ. 1. 26 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு, துபாய், சிங்கப்பூர் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வரும் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனைக்கு பின்னரே வெளியேற அனுமதித்து வருகின்றனர். அவ்வப்போது வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் தங்கம், போதைப்பொருட்கள், தடை செய்யப்பட்ட விலங்குகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில் கடந்த 28ம் தேதி சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு வந்த விமானத்தில் பயணித்த பயணி மீது சந்தேகம் ஏற்பட்டதால், சுங்கத்துறை அதிகாரிகள் அவரை பிடித்து சோதனை செய்தனர். சோதனையில், அவர் தங்கக்கட்டிகளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், பயணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பரிமுதல் செய்யப்பட்ட 2 கிலோ தங்கக்கட்டிகளின் மதிப்பு சுமார் ரூ. 1. 26 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தங்கத்தை கோவையைச் சேர்ந்த யாரேனும் கடத்தி வர கூறினார்களா என்கிற கோணத்தில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது நடந்து வருகிறது.

 

Tags :

Share via

More stories