மோடி ஏன் அவரது மனைவிக்கு குங்குமம் கொடுக்கவில்லை? மம்தா கேள்வி

பிரதமர் மோடியின் 3-வது கால பதவியின் முதல் ஆண்டு நிறைவு, ஆபரேஷன் சிந்தூர் வெற்றி ஆகியவற்றை கொண்டாட வீடு வீடாக பாஜகவினர் குங்குமம் வழங்க உள்ளதாக தகவல் பரவியது. இது குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா விமர்சனம் செய்துள்ளார். ஒவ்வொரு பெண்ணும் தங்கள் கணவரிடமிருந்து மட்டுமே குங்குமத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். ஏன் முதலில் உங்கள் (மோடி) திருமதிக்கு குங்குமம் கொடுக்கவில்லை. மோடி முதலில் தேநீர் விற்பனையாளர், பின்னர் காவலாளி, இப்போது குங்குமம் விற்பவர் ஆக மாறியுள்ளார் என விமர்சித்துள்ளார்.
Tags :