வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் கைது!

by Editor / 02-07-2023 10:08:51am
வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் கைது! விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கிருஷ்ணவேணி என்பவருக்கு சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ₹3.5 லட்சம் மோசடி செய்த வழக்கில் வெம்பக்கோட்டை மேற்கு அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் விஜய நல்லதம்பி என்பவரை கைது செய்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Tags :

Share via