வாடகைக்கு எடுத்து வசதியாக விபச்சாரம் - 7 பேர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகேயுள்ள பம்மம் ஈடன் கார்டன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக காவல்துறைக்கு கிடைத்த ரகசியத்தகவலைத்தொடர்ந்து மார்த்தாண்டம் போலீசார் அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தியபோது, குழித்துறை பெரியவிளை பகுதியை சேர்ந்த சுனில் (வயது 45) என்பவர் வெளிமாநில அழகிகளை வரவழைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதையடுத்து சுனில், அங்கிருந்த 2 பெண்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் ஆரல்வாய்மொழியில் திருமண நிகழ்ச்சிக்கு என வீட்டை வாடகைக்கு எடுத்து, அழகிகளை வைத்து விபசாரத்தில் ஈடுபட்டதாக ஒருவரை கைது செய்தனர். மீட்கப்பட்ட பெண்கள் அனைவரும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
Tags :














.jpg)




