போட்டியின்றி எம்பியாகும் டாக்டர் கனிமொழி,ராஜேஷ்குமார்

by Editor / 23-09-2021 07:02:06pm
போட்டியின்றி எம்பியாகும் டாக்டர் கனிமொழி,ராஜேஷ்குமார்

 

மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி சோமு, ராஜேஸ்குமார் ஆகியோரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
தமிழ்நாட்டில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் தங்களது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். காலியாக இருக்கும் 2 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு அக்டோபர் 4 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதையடுத்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு திமுக சார்பில் கனிமொழி சோமு, ராஜேஸ்குமார் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில் கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் ஆகியோரது வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. சுயேச்சை வேட்பாளர்களாக போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இதேபோல், புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலுக்கு தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெற்றது. இதில், பாஜக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு மட்டும் ஏற்கப்பட்டதால், அவர் போட்டியின்றி மாநிலங்களவைக்கு தேர்வாகிறார்.
வேட்பு மனுக்களை வாபஸ் பெற வரும் 27ந்தேதி கடைசி நாள் என்பதால், அன்றைய தினம் செல்வகணபதி மாநிலங்களவை உறுப்பினராவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அதிகாரி முனிசாமி தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via