திமுக எம்.பி ஆ.ராசாவின் மனைவி காலமானார்

திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக மார்பக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து உடல்நிலை மேலும் மோசமானதையடுத்து அவர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அவரது கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் பரமேஸ்வரி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. கவலைக்கிடமான நிலையில் இருந்த அவரை காப்பாற்ற போராடியும் அவை பலன் அளிக்காமல் இரவு 7.05 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Tags :