மஹாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு செல்வப்பெருந்தகை வாழ்த்து

சமண சமயத்தை நிறுவிய மகாவீரரின் பிறந்தநாளான (ஏப்ரல் 21) மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர்,வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அரச வாழ்வை துறந்து, தமது செல்வத்தையெல்லாம் மக்களுக்கு தானமாக வழங்கி, பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாமையே அறம் என்பதை மக்களுக்கு விளக்கி, அகிம்சை நெறியை உலகிற்கு உணர்த்தியவர் மகாவீரர். அவரது போதனைகளை பின்பற்றி வாழும் சமண மக்களுக்கு மகாவீரர் ஜெயந்தி வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
Tags :