ரஷ்யாவின் நிழல் கடற் படை எண்ணெய்க் கப்பல்களில் ஏறி சோதனையிட அல்லது பறிமுதல் செய்யபிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டார்மர் அனுமதி
பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டார்மர் தனது நாட்டு ராணுவம் ரஷ்யாவின் நிழல் கடற் படை எண்ணெய்க் கப்பல்களில் ஏறி சோதனையிட அல்லது பறிமுதல் செய்ய அனுமதி வழங்கியுள்ளார். அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பின்படி, உக்ரைன் மீதான போருக்காக ரஷ்யா நிதி திரட்டுவதை தடுக்கவும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளை மீறி ரஷ்யா என்னை ஏற்றுமதி செய்வதை கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரிட்டிஷ் ராணுவம் மற்றும் சட்ட அமலாக்கத் துறையினர் இங்கிலாந்து கடல் எல்லை மற்றும் ஆங்கில கால்வாய் வழியாக செல்லும் சந்தேகத்திற்குரிய அல்லது தடை செய்யப்பட்ட ரசிக கப்பல்களை தடுத்து நிறுத்தி சோதனை எல்லாம் என்றும் தெரிவித்துள்ளது. சோதனையின் போது விதிகள் மீறப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால் அந்த கப்பல்களை பறிமுதல் செய்யவும் உத்தரையாடப்பட்டுள்ளது. கப்பலின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் பிரிட்டிஷ் கடற் படையினருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. 2026 ஜனவரியில் அட்லாண்டிக் பெருங்கடலில் ரஷ்யாவின் மெரி நைரா கப்பலை அமெரிக்கா பறிமுதல் செய்ததற்கு இங்கிலாந்து உதவியது .அதனை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து தனது சொந்த எல்லையை இத்தகைய அதிரடி நடவடிக்கைகளை எடுக்க தொடங்கி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக பிரிட்டிஷ் அரசு தெரிவித்துள்ளது. ரஷ்ய அதிபரின் போருக்காக தவறான வழியில் பணம் ஏற்றுவதை தடுப்பதே தங்களுடைய நோக்கம் என்றும் பிரிட்டிஷ் தெரிவித்துள்ளது.
Tags :


















