அமெரிக்காவுடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம் தற்போதைக்கு இல்லை

by Admin / 26-03-2026 11:59:54am
அமெரிக்காவுடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம் தற்போதைக்கு இல்லை

அமெரிக்காவுடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி நேற்று ஈரான் அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அமெரிக்காவுடன் நேரடி பேச்சு வார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை என்பதை அவர் உறுதிப்படுத்தி உள்ளதோடு நட்பு நாடுகள் மற்றும் சில நபர்கள் மூலமாக செய்திகள் பரிமாறப்படுகின்றன .ஆனால், இதை பேச்சுவார்த்தை அல்லது உரையாடல் என கருத முடியாது என்றும் அவர் குறிப்பிட்டதோடு மோதலை நிறுத்த அமெரிக்க முன்வைத்த 15 அம்ச திட்டத்தை பாகிஸ்தான் அதிகாரிகள் ஈரானிடம் வழங்கினர். ஆனால், இந்த முன்மொழிவு அத்து மீறிய அது என்றும் அதை ஈரான் நேர்மையாக பார்க்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் போரை விரும்பவில்லை. ஆனால், தனது நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே போரை முடிவுக்கு கொண்டு வரும். மேலும் ஈரானை தூண்டுவது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உலகுக்கு காட்டி விட்டதாக அவர் கூறினார். ஈரான்- இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்துள்ள சூழலில் அமெரிக்கா தனது படைகளை இப் பகுதிகளில் கூடுதலாக குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via