ஹாங்காங்கில் தலைமை நிர்வாகி தேர்தல் ஒத்திவைப்பு

by Admin / 19-02-2022 01:28:07pm
ஹாங்காங்கில் தலைமை நிர்வாகி தேர்தல் ஒத்திவைப்பு


சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மருத்துவமனைகளில் படுக்கைகள் அதிவேகமாக நிரம்பி வருகின்றன. மருத்துவப் பணியாளர்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், கொரோனா பரவல் அதிகரிப்பால் ஹாங்காங்கில் தலைமை நிர்வாகி தேர்தல் வரும் 6 வாரத்துக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, ஹாங்காங் தலைவர் கேரி லாம் கூறுகையில், கொரோனா பரவல் அதிகரிப்புக்கு முழு ஊரடங்கு என்பது தீர்வல்ல. 

கொரோனா வைரஸ் தொற்றின் அலையால் ஹாங்காங் தலைமை நிர்வாகி தேர்தல் 6 வாரத்துக்கு ஒத்திவைக்கப்படுகிறது. 

தலைமை நிர்வாகி தேர்தல் மார்ச் 27-ம் தேதி நடைபெற இருந்த நிலையில், மே 8ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via