காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடி அபராதம்
வருமான வரி கணக்கை முறையாக தாக்கல் செய்யாத காங்கிரஸ் கட்சிக்கு, வருமான வரித்துறை அபராதம் விதித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கை வருமான வரித்துறை முடக்கிய நிலையில், 2017-18 முதல் 2021-22 வரை நான்கு நிதியாண்டுகளாக முறையாக வரித்தாக்கல் செய்யாததால், வட்டி மற்றும் அபராதத்துடன் ரூ.1700 கோடியை செலுத்த காங்கிரஸ் அலுவலகத்திற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags :