தீ விபத்து உயிர்தப்பிய 4 உயிர்கள்
மேட்டூர் அடுத்த தங்கமாபுரி பட்டிணத்தை சேர்ந்தவர் நடராஜன் (65) தெய்வானை (55) தம்பதியினர் குடிசை வீட்டில் வசித்து வந்தனர். இன்று காலை இவர்களது குடிசை வீட்டில் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அப்போது வீட்டிலிருந்த நடராஜன் அவரது மனைவி தெய்வானை, பேத்திகள் தேவிஷா(12), நித்திஷா (8) ஆகியோர் உடனடியாக வெளியேறியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்து குறித்து அப்பகுதி மக்கள் அனல்மின் நிலைய தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து காரணமாக வீட்டில் இருந்த பணம், ஆவணங்கள், உடைகள், டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் குப்பைகளை எரிக்கும் போது அதிலிருந்து வெளியான தீ பொறி காரணமாக நடராஜன் குடிசை வீடு தீப்பற்றி எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது. தீ காரணமாக சிறிது நேரத்தில் பரபரப்பு விபத்து ஏற்பட்டது.
Tags :



















