சென்னையில் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு
சென்னையில் இருந்து தமிழகத்தில் மற்ற ஊர்களுக்கு செல்லும் விமான கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது.மக்களவை தேர்தல் நாளை (ஏப்ரல் 18) நடைபெற உள்ளதால் மக்கள் சொந்த ஊர் நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில், விமான கட்டணம், சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்ல ரூ. 3957இல் இருந்து ரூ. 12,716 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை - மதுரை விமான டிக்கெட் ரூ. 3674 இல் இருந்து ரூ. 8,555 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு அதிகபட்சமாக ரூ. 11,531 டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.
Tags :