பழம்பெரும் நடிகை மாலினி காலமானார்

இலங்கை சினிமாவின் ராணி என்று அழைக்கப்படும் மாலினி பொன்சேகா இன்று (24) அதிகாலை காலமானார். பிரபல சிங்கள நடிகையான இவர் சிங்களம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 150-க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் ‘பைலட் பிரேம்நாத்' படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் ரசிகர்கள் மனத்தில் இடம்பிடித்த பிடித்தார். மேலும், சிறிது காலம் அந்நாட்டின் எம்பியாகவும் இருந்தார். இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Tags :