மே 26 சந்திர கிரகணம்

by Editor / 24-07-2021 09:42:17am
மே 26 சந்திர கிரகணம்

வானிலே சிவப்பு நிலா ரத்த சிவப்பு நிறத்தில் தோன்றவுள்ள இந்த சந்திர கிரகணம் சூரிய அஸ்தமன நேரத்துக்கும் நள்ளிரவுக்கும் இடைப்பட்ட நேரத்தில் சந்திர கிரகணம் தெரிய வாய்ப்பு உள்ளது. 
இப்போது வரப்போகும் சூப்பர் மூன் அதிக நேரம் வரை வானில் இருக்கும். இந்த கிரகணம் இந்தியாவில் நன்றாக தெரியும் என்பதால் அனைவரும் பார்க்கலாம். இது இந்த நூற்றாண்டின் மிக நீண்ட முழு சந்திர கிரகணம் என வானியல் ஆய்வாளர்கள்  தெரிவிக்கின்றனர்.


இந்த சந்திர கிரகணம் தினத்தில் உடல்நலம், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பார்க்கக் கூடாது என்று ஜோதிடர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 
 
கிரகணம் அன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?
 
* கிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே எந்த வித உணவும் உட்கொள்ளக் கூடாது.
 
* உணவுகளில் தர்ப்பை புல்லினை போட்டு வைக்க வேண்டும். கிரகணத்தின் போது நவகிரக துதியை பாராயணம், சந்திர கிரகணத்துக்கான துதியையும்  பாராயணம் செய்யலாம்.
 
* கர்ப்பிணி பெண்கள் வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது. 
 
* ஆலயங்கள் அனைத்தும் மூடி இருக்க வேண்டும். கிரகண நேரத்தில் ஆலய தரிசனம் கூடாது.
 
* செய்து வைத்திருக்கும் உணவுகளில் தர்ப்பை (அருகம்புல்) புல்லினைப் போட்டு வைக்க வேண்டும்.
 
* கிரகண விமோசன காலத்தில் அதாவது கிரகணம் முழுவதும் முடிந்ததும் ஸ்நானம் செய்துவிட்டு ஆலய தரிசனம் மெற்கொள்ள வேண்டும்.
 
* கிரகணம் முடிந்ததும், பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லது. ஆலய தரிசனம் மேற்கொண்ட பிறகே உணவு உட்கொள்ள  வேண்டும்.
 

 

Tags :

Share via