சிவகங்கை அருகே  கொரோனா இல்லாத  கிராமம் நோய்  தடுப்பில் தீவிர நடவடிக்கை 

by Editor / 24-07-2021 06:03:31pm
சிவகங்கை அருகே  கொரோனா இல்லாத  கிராமம் நோய்  தடுப்பில் தீவிர நடவடிக்கை 


சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியத்திற்க்கு உட்பட்ட கானுர் கிராமம் கொரொனா இல்லாத கிராமமாக திகழ்கிறது.
கானுர் கிராமத்து இளைஞர்கள் உண்மை உழைப்பு உயர்வு என விளையாட்டாக ஆரம்பித்த வாட்ஸ் ஆப் குழுவின் மூலம் தங்கள் கிராமத்திற்க்கு தேவையான அனைத்து விதமான நலத்திட்ட உதவிகளையும் பெரியவர்களுடன் ஆலோசித்து திட்டம் தீட்டி செய்படுத்தி வருகின்றனர்.


கொரொனா முதல் அலையின் போதும் மிகத்தெளிவாக செயல்பட்டு எந்த ஒரு அசம்பாவிதமும் நடந்து விடாதபடி கிராமத்து இளைஞர்கள் பார்த்துக் கொண்டனர்.அதே போன்று இரண்டாம் அலை உச்சத்தில் உள்ள இந்த நிலையில், கிராமத்தில் யாருக்கும் கொரொனா நொய் தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்று கண்ணும் கருத்துமாக இருந்து கிராம மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை பல வகையான உணவுகளின் மூலம் அதிகப் படுத்தி வருகின்றனர்.


தினமும் அனைவருக்கும் கபசுர குடிநீர் முருங்கை சூப் வாழைத்தண்டு சூப் காளான் சூப் முளைகட்டிய பயறு வகை, வேர்க் கடலை போன்ற சக்தி மிகுந்த உணவுகளை வழங்குகின்றனர். சிம்பிளாக சளி, தலைவலி வந்தாலும் சித்த மருத்துவத்தை கடைப்பிடித்து தீர்வு காணுகின்றனர்.ஊர் திறந்தவெளியில் உடற்பயிற்சியும் மேற்கொள்கின்றனர். நோய் வராமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி, தேவையான உதவிகளை இளைஞர்கள் முன் நின்று செய்கின்றனர்.

 

Tags :

Share via