வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

by Admin / 06-11-2025 12:28:45pm
 வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அடுத்த சில நாட்களுக்கு மத்திய மற்றும் மேற்கு தமிழக மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும். குறிப்பாக, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழைக்கு வாய்ப்புள்ளது.
 நவம்பர் 7 வெள்ளிக்கிழமை முதல் மழைப்பொழிவு தென் மாவட்டங்களுக்கு நகர வாய்ப்புள்ளது. இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
 சென்னையில், வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.குறிப்பாக, மாலை மற்றும் அதிகாலை நேரங்களில் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சென்னைக்கு கனமழை எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
வங்கக்கடலிருந்து வரும் ஈரப்பதம் காரணமாக நவம்பர் 11 ஆம் தேதி வரை இந்த மழை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

 வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
 

Tags :

Share via