நாகப்பட்டிணம் - இலங்கை பயணிகள் கப்பல் சேவை அக்டோபர் 14 ஆம் தேதி முதல் இயக்கம்.

நாகப்பட்டிணம் - இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை அக்டோபர் 14 ஆம் தேதி முதல் இயக்கத்தை தொடங்குகிறது.தொடக்க நாளில் மட்டும் பயண கட்டணத்தில் 75% சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. 'செரியபாணி' என்ற நாகை - இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து சேவை அக்டோபர் 14 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. அக்டோபர் 14 ஆம் தேதி மட்டும் ரூ.2,803 என
நாகப்பட்டிணம் - இலங்கை இடையே ஒருமுறை பயணக்கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கப்பலில் பயணம் செய்ய ரூ. 7,670 ஆக இருந்த நிலையில் முதல் நாளில் மட்டும் ஒருநாள் சலுகை கட்டணம் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Tags : நாகப்பட்டிணம் - இலங்கை பயணிகள் கப்பல் சேவை அக்டோபர் 14 ஆம் தேதி முதல் இயக்கம்.