இலக்கை தவறவிட்ட ராணுவ ஆளில்லா விமானம்.. 120 பேர் பலி

நைஜீரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ராணுவத்தால் ஏவப்பட்ட ஆளில்லா விமானம் அதன் இலக்கை தவறவிட்டு பொதுமக்கள் மீது விழுந்தது. இந்த சம்பவத்தில் 120 பேர் உயிரிழந்தனர். ஞாயிற்றுக்கிழமை இரவு கடுனா மாநிலம் இகாபியில் மதப் பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருந்த மக்கள் மீது ட்ரோன் வெடிகுண்டு திடீரென விழுந்தது. விடுமுறை நாளானதால் திருவிழாவில் கூட்டம் அலைமோதியது. இதனால் உயிர் சேதம் அதிகரித்துள்ளது. சமீபகாலமாக ராணுவம் பயன்படுத்தும் ஆளில்லா விமானங்கள் இலக்கை தவறவிட்டு அடிக்கடி குடியிருப்பு பகுதிகளில் விழுந்து வருகின்றன.
Tags :