தெரு நாய் கடித்து சிகிச்சையில் இருந்த கூலித் தொழிலாளி பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, தெரு நாய் கடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தோட்ட கூலித் தொழிலாளி முனி மல்லப்பா (50) உயிரிழந்தார். தனியார் தோட்டத்தில் வேலை பார்த்தபோது நாய் கடித்ததில், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவருக்கு மீண்டும் பாதிப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags :



















