ஆப்கானிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி புகழஞ்சலி லதா மங்கேஷ்கரின் பாடல்கள் என்றும் நிலைத்திருக்கும்

by Admin / 07-02-2022 11:17:55am
ஆப்கானிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி புகழஞ்சலி லதா மங்கேஷ்கரின் பாடல்கள் என்றும் நிலைத்திருக்கும்

இந்தியாவின் இன்னிசைக்குயில் என்று போற்றப்பட்ட லதா மங்கேஷ்கர் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த மாதம் 8-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்,உயிரிழந்தார்.

இந்த நிலையில், லதா மங்கேஷ்கர் குறித்து பேசியுள்ள ஆப்கானிஸ்தான் முன்னாள் குடியரசு தலைவர் ஹமீத் கர்சாய், தன்னுடைய குரலால் லட்சக்கணக்கான மனங்களை மகிழ்ச்சியால் நிறைத்தவர் என்றும், அவரது இனிய பாடல்கள் உலகம் முழுவதும் பரவியிருப்பதுடன் என்றும் நிலைத்திருக்கும் எனக் கூறியுள்ளார்.
 
இந்திய இசைப்பறவையின் ஆத்மா அமைதி அடையட்டும் எனவும் பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via