மீண்டும் கூட்டுப் பலாத்காரம்: மெய்தி பெண் புகார்

by Staff / 10-08-2023 02:51:31pm
மீண்டும் கூட்டுப் பலாத்காரம்: மெய்தி பெண் புகார்

வன்முறை சம்பவங்களால் நிலைகுலைந்துள்ள மணிப்பூரில் மீண்டும் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டதாக மெய்தி சமூகத்தைச் சேர்ந்த பெண் பரபரப்பு புகார் அளித்துள்ளார். மெய்தி பெண்ணை குக்கி சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் கூட்டு பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மே 3ஆம் தேதி சுராசந்த்பூர் பகுதயில் வைத்து குக்கு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பலாத்காரம் செய்ததாக பிஷ்ணுபூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து உடனடி விசாரணை நடத்தக் கோரி சுராசந்த்பூர் போலீசுக்கு புகார் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via

More stories

Logo