கனமழை எதிரொலி குற்றாலம் மெயினருவி,பழைய குற்றாலம் அருவியில்  வெள்ள பெருக்கு

by Editor / 03-12-2022 07:35:14am
கனமழை எதிரொலி குற்றாலம் மெயினருவி,பழைய குற்றாலம் அருவியில்  வெள்ள பெருக்கு

தென்காசி மாவட்ட மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை எதிரொலி குற்றாலம் மெயினருவி,பழைய குற்றாலம் அருவியில்  வெள்ள பெருக்கு காரணமாக குளிக்க தடை'


தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில்  நேற்று மாலை முதல் இலேசான மழை பெய்த நிலையில் வனப்பகுதியில் திடீரென கன மழை பெய்தது இம்மழையின் காரணமாக தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைஅடிவாரப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது இதன் தொடர்ச்சியாக அருவிகளின் நகரம் என போற்றப்படும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம் மெயின் அருவி ஐந்தருவி,பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து ஆர்ப்பரித்து கொட்டத் தொடங்கியது.இதன் தொடர்ச்சியாக குற்றாலம் மெயினருவி,,பழைய குற்றாலம் அருவியில் நேற்று இரவு முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குற்றாலம் மெயினருவி,,பழைய குற்றாலம் அருவியில் நேற்று நள்ளிரவு முதல் சுற்றுலாப்பயணிகள்,அய்யப்பா பக்தர்கள்  குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை செய்தது.தென்காசி மாவட்ட மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை  காரணமாக இரண்டு அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கபட்டதன்  காரணமாக அய்யப்பாபக்தர்கள்,சுற்றுலாப்பயணிகள் கூட்டம் ஐந்தருவியில் அலைமோதி வருகிறது.

 

Tags :

Share via