தூத்துக்குடி மாவட்டத்தில் 4 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

by Editor / 11-03-2023 07:43:15am
தூத்துக்குடி மாவட்டத்தில் 4 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை முயற்சி மற்றும் ஆடு திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட 4 எதிரிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள்6 பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் திரு. கே. செந்தில்ராஜ் இ.ஆ.ப அவர்கள் நடவடிக்கை.

தூத்துக்குடி மாவட்டம்  கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கயத்தாறு தெற்கு சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த மணி மகன் ரஞ்சித்குமார் (46) என்பவரிடம் கடந்த 19.02.2023 அன்று மதுபோதையில் தகராறு செய்து அவரை அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் கயத்தாறு புதுகாலனியை சேர்ந்த சுப்பிரமணி மகன் கணேசன் (32), தூத்துக்குடி ராஜபாண்டி நகரை சேர்ந்தவர்களான சுப்பிரமணி மகன் இசக்கிமுத்து (35) மற்றும் ராமசந்திரன் மகன் முருகன் (30) மற்றும் சிலரை கயத்தாறு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளான கணேசன், இசக்கிமுத்து மற்றும் முருகன் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரனும்,

30.12.2022 அன்று சேரகுளம் காவல் நிலைய எல்லைக்குகட்பட்ட கருங்குளம் to ராமனுஜம்புதூர் சாலையில் உள்ள ஒரு தோட்டத்திற்குள் புகுந்து அங்கு இருந்த காவலாளிகளை அரிவாளால் தாக்கிவிட்டு அங்கு இருந்த 37  ஆடுகளை சரக்கு வாகனத்தில் திருடிச்சென்ற வழக்கில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி மறுகால்குறிச்சியை சேர்ந்த ஆறுமுகம் மகன் முத்து (எ) முத்துபாண்டி  (28) மற்றும் சிலரை சேரகுளம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரியான முத்து (எ) முத்துப்பாண்டி மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சேரகுளம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு)  அன்னராஜூம்  அறிக்கை தாக்கல் செய்தனர்.

 காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கயத்தாறு புதுகாலனியை சேர்ந்த சுப்பிரமணி மகன் 1) கணேசன், தூத்துக்குடி ராஜபாண்டி நகரை சேர்ந்த சுப்பிரமணி மகன் 2) இசக்கிமுத்து, அதே பகுதியை சேர்ந்த ராமசந்திரன் மகன் 3) முருகன் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி மறுகால்குறிச்சியை சேர்ந்த ஆறுமுகம் மகன் 4) முத்து (எ) முத்துபாண்டி  ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் மேற்படி 4 எதிரிகளையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via