இரண்டு விமானங்கள் மோதியதில் 5 பேர் பலி

மெக்சிகோவில் திங்கள்கிழமை பயங்கர விபத்து நடந்தது. துராங்கோ, லா கலன்சிட்டா நகரில் உள்ள விமான ஓடுதளத்தில் இரண்டு தனியார் விமானங்கள் மோதிக்கொண்டன. ஒரு விமானம் புறப்படும்போதும் மற்றொன்று தரையிறங்கும் போதும் விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மோதியதில் இரு விமானங்களும் தீப்பிடித்து எரிந்தன. இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Tags :