ஜனநாயகத்தைப் பயன்படுத்தி திருடர்கள் தப்பிக்கிறார்கள்
பிரபல மலையாள நடிகரான ஸ்ரீனிவாசன், ஜனநாயகத்தின் மூலம் சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளைப் பயன்படுத்தி திருடர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள் எனக் கூறியுள்ளார். சமீபத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், சாக்ரடீஸ் தற்போது உயிருடன் இருந்தால், ஜனநாயகத்தை உருவாக்கியவரை கொலை செய்துவிட்டு தானும் விஷம் குடித்து இறந்திருப்பார். இப்போது, நமக்கான நியாயம் நமக்கே எதிராக உள்ளது. அடிப்படையில் நான் இந்த ஜனநாயக அமைப்பையே எதிர்க்கிறேன். இந்தியா முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்வதாகத் தெரியவில்லை எனக் கூறினார்.
Tags :