அம்மிக்கல்லை போட்டு பெண் கொலை

by Staff / 03-03-2023 04:25:03pm
அம்மிக்கல்லை போட்டு பெண் கொலை

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையை சேர்ந்தவர் பரமேஸ்வரி (40). இவருடன் கம்பர் தெருவை சேர்ந்த நமச்சிவாயம் என்பவர் பழகி வந்துள்ளார். இந்த நிலையில், நமச்சிவாயத்தின் மகன் ஆனந்தகுமார் (30), தனது தந்தையிடம் இந்த தகாத உறவை கைவிடுமாறு கண்டித்துள்ளார். இதனையடுத்து பரமேஸ்வரி வீட்டிற்கு சென்ற ஆனந்தகுமார் அம்மிக்கல்லை தலையில் போட்டுவிட்டு தப்பி சென்றார். இதில் பலத்த காயமடைந்த பரமேஸ்வரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சிவகங்கை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via